![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 182
![]() இதழ் 182 [ மார்ச் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் きりぎりす 鳴くや霜夜の さむしろに 衣かたしき ひとりかも寝む கனா எழுத்துருக்களில் きりぎりす なくやしもよの さむしろに ころもかたしき ひとりかもねむ ஆசிரியர் குறிப்பு: பெயர்: அமைச்சர் யொஷிட்சுனே காலம்: கி.பி. 1169-1206. 38 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்த இவர் இத்தொடரின் 83வது பாடலை இயற்றிய புலவர் தொஷினாரியிடம் கவிதை பயின்றார். பல்வேறு கவிதைப்போட்டிகளில் பங்கேற்ற இவர் ஷின்கொக்கின்ஷூ தொகுப்பைத் தொகுக்கப் பணிக்கப்பட்ட குழுவில் ஒருவராக இருந்தார். அகிஷினோ என்ற பெயரில் அத்தொகுப்புக்கு முன்னுரை ஒன்றையும் எழுதியிருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகத் தனிப்பாடல் திரட்டு ஒன்றும் 320 பிற பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பிற்காலக் கவிஞர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றிருக்கிறார். பாடுபொருள்: தனிமையான இரவின் வலி பாடலின் பொருள்: கிரிக்கெட் பூச்சிகள் கிரீச்சிடும் இந்தக் குளிர்ந்த இரவில் ஓருடையில் தனியாக உறங்குவதோ? தனிமையின் வலியைக் கூறும் ஓர் எளிய பாடல். பொதுவாகக் காதலர்கள் ஒன்றாக உறங்கும்போது இருவரின் ஆடையையும் ஒன்றாகப் போர்த்துக்கொண்டு உறங்குவர். இப்பாடலில் ஓருடையில் உறங்குகிறேன் என்று கவிஞர் சொல்வது தனியாக உறங்குகிறார் என்ற பொருளைத் தருகிறது. முந்தைய பாடலில் பார்த்ததுபோல ஹொன்காதோரி முறையில் இயற்றப்பட்டதுதான் இப்பாடலும். இத்தொடரின் 3வது பாடலுக்கு (பீலியன்ன நீள் இரவு) மறுமொழியாக இயற்றப்பட்டதுதான் இப்பாடல். வெண்பா: ஈருடை போர்த்தியே காதலர் சேர்வரே; ஓருடை தன்னில் உறங்குதல் - யாரும் விரும்பார்; கனிவிலா மங்கை அருளால் தனியாய்க் குளிராய் இரவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |