![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 91
![]() இதழ் 91 [ ஜனவரி 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அது பலவித ஓசைகளையும், ஆனந்த ஆரவாரங்களையும் உடைய மலைநாடு. என்றும் அம்மலையின்கண் சிறந்த ஒலிகளைக் குதூகலமாய்க் கொண்ட ஊர் அது. பரிசில் பெற வரும் கூத்தன் ஒருவனை, வழியில் கண்ட பரிசில் பெற்ற கூத்தன் மற்றும் ஒருவன் பெருமிதத்துடன் ஆற்றுப்படுத்துகிறான். மாமழை விளையாடும் மலைகளையுடைய மாமன்னன் நன்னனது நாடு. அந்நாட்டில்தான் எத்தனை எத்தனை ஓசைகள்! அவனின் பெருமைகள்தான் எத்தனையெத்தனை!! எண்ணில் அடங்காதவை. அங்கு மனைவாழும் பெண்டிர் தலைசிறந்த விருந்தோம்பல் பண்புடையவர்களாக விளங்கினர். அத்தமிழ்ச் சமுதாயத்தில், தம் இல்லம் வரும் விருந்தினரை அன்புடன் வரவேற்று, இன்முகத்துடன் உபசரித்து, தம் பிள்ளைகளைக் கொண்டு வந்த உறவினரின் உறவுமுறைப் பெயர் சொல்லி அழைக்கச் செய்தனர். வந்த விருந்தினர்களுக்கு வேண்டுவன பலசெய்து, உவகையுடன் உபசாரங்கள் பல நல்கி மகிழ்ந்தனர். "மலைபடுகடாம்" பாடிய இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் தம் பாடலில் உவந்து கூறுகிறார் இவ்வாறு. "அகம்மலி உவகை ஆர்வமொடு அளைக மகமுறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர்", - மலைபடுகடாம் : 184-185. அதாவது, நெஞ்சம் மகிழ, விருந்தினரைப் பெற்றோமே என்ற உவகையுடன் மிகுந்த ஆர்வமுடன் தம் பிள்ளைகளைக் கொண்டு உறவுமுறை சொல்லி அழைக்கச் செய்வதை மனைகள் தோறும் காண்பீர். மலைவாழ் மக்களின் நனிச்சிறந்த நாகரிக நல்வாழ்க்கைக்கு இப்பாடல்வரிகள் சீரிய எடுத்துக்காட்டாகும். பண்பாட்டுச் சிறப்பில் தலைசிறந்து வாழ்ந்த தமிழ்ச்சமூகம் அன்றையது. வீடுதோறும் இந்நற்பழக்கம் இடம் பெற்றிருந்தது என்பது பாடல்வழி திண்ணம். "எத்தனை உறவுமுறைகள் உண்டோ? அத்தனை உறவுப் பெயர்கள் கொண்ட மொழியைத் தாய்மொழியாய்ப் பெற்ற பெருமைமிகு இனம் நம் தமிழ் இனம். பெருமை கொள் தமிழா!!" (அதுசரி, நம்மிடையே வாழ்ந்த அத்தை, மாமன், அம்மான், அம்மங்கா, அத்தங்கா எல்லோரும் எங்குச் சென்று விட்டனர்? டாடி, மம்மி என்று அழைக்காவிட்டால் பெரிய கௌரவக் குறைச்சல் இல்லையா தற்போதைய தமிழ்த் தாய் தந்தையர்க்கு? என்ன செய்வது? எல்லா உறவுகளையும் ஆண்ட்டி, அங்கிள்-க்குள் அடக்கியாகி விட்டது நம்முடைய மேல்நாட்டு ஆங்கில மோகத்தால். ஆனால், மேல்நாட்டவரோ நம் உறவு முறைகளைக் கண்டு வியக்கின்றனர். மொழிவளமையைக் கண்டு மலைக்கின்றனர். நம்மவருக்குத்தான் தம் பெருமை தெரியாது. மேல்நாட்டான் பெருமை மட்டும்தான் தெரியும்.) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |