![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 61
![]() இதழ் 61 [ ஜுலை 15 - ஆகஸ்ட் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
உலகில் இன்றைய தலையாய பிரச்சனையாய் விளங்குவது இயற்கை வளங்களின் சீரழிவு என்று சொன்னால் அது மிகையில்லை. இயற்கை வளங்களை மனிதன் உபயோகப்படுத்துவது சரியானதே ஆனால் அப்படி உபயோகிப்பதிலும் மிகையின்றி, அவ்வியற்கை வளங்கள் அழியாமல் பிற்காலத்திற்கும் இருக்கும் வகையில் பாதுகாப்புடனே (sustainable) செய்தால் தான் நல்லது. சுற்றுச்சூழல் கெடுவதில் தொடங்கி, ஓசோன் (ozone) மண்டலத்தின் ஓட்டையிலிருந்து பல உயிரினங்கள் மடிந்து அற்றுப்போவது வரை பலவும் இவ்வியற்கை சீரழிவினாலே ஏற்படுகிறது. ஒரு உயிரினம் மடிந்து பூமியில் இல்லாமல் போகிறது என்றால் அது எத்தனை கொடுமையானது.. இப்படி மடிந்து அற்றுப்போன விலங்கினங்கள் மற்றும் தாவர வகைககள் எத்தனையோ. ஆனாலும் விழிப்பு வந்தபாடில்லை. அற்றுப்போககூடிய நிலையில் உள்ள விலங்குகளை கொடூரமாய் வேட்டையாடுவது இன்றும் நடந்துகொண்டிருக்கும் கொடுமை. மனிதனின் பேராசையில் விளையும் இவ்வழிவுகளை நினைத்தால் நெஞ்சம் குமுறுகிறது. நிறுத்துங்கள். இதற்கும் வரலாறிற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள். ஒரு வகையில் இருக்கிறது. வரலாறு என்பது மனிதனைப் பற்றியது மட்டும் இல்லை, பல காலங்களில் சமுதாயம் - விலங்குகள், பறவைகள், தாவரங்கள், மலைகள், கடல்கள், ஆறுகள் அனைத்தையும் பற்றியது தான். ஆனால் இப்பொழுது சொல்லவந்திருக்கும் செய்தியும் அழிவைப் பற்றியது தான், மனிதனின் பேராசசையால் விளையும் வரலாற்றுத் தடயங்களின் அழிவைப் பற்றியது, . மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை சீரழிவில் இந்தியாவில் நடக்கும் ஆற்று மணல் கொள்ளையும், கிரானைட் தொழிற்சாலைகளுக்காக வெட்டப்படும் குன்றுகள் மற்றும் மலைப்பாறைகளும் அடக்கம். இவற்றுள் குன்றுகள் மற்றும் மலைப்பாறைகளில் நடக்கும் கல்லுடைப்பு பல வரலாற்றுத் தடையங்களையும் சேர்த்து உடைக்கின்றது. முந்தைய வரலாறு டாட் காம் இதழ்களில் குறிப்பிடப்பட்ட செய்திதான். என்றாலும் மேலும் மேலும் புதிய செய்திகள் அழிவுச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றனவே. என்ன செய்வது. இந்த அராஜகத்தை எப்படி தடுப்பது? கீழேயுள்ள இணைப்பைப் பாருங்கள். http://www.frontlineonnet.com/fl2614/stories/20090717261406600.htm மதுரைக்கு அருகில் உள்ள சில மூத்தோர் நினைவுச்சின்னங்கள் கல்லுடைப்பினால் முழுமையாக அழிந்துவிட்டதைப் பற்றிய துன்பகரமான செய்தி. மேலும் குன்றுகளில் உள்ள குகைத்தளங்கள் மற்றும் மலைச்சரிவுகளில் வெட்டப்பட்டிருக்கும் பண்டைய தமிழ் பிராமி கல்வெட்டுகள், அங்குள்ள பழங்கால சிற்பங்கள், மற்றும் கற்கால ஓவியங்கள் இவையும் ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றன. தொல்லியல் கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்களில், இப்படி பழமையான கல்வெட்டுகள் மற்றும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் 100மீட்டர் வரை கல்லுடைப்போ, கட்டுமானமோ நடைபெறக்கூடாதென்றும் இந்த சின்னங்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் கல்லுடைப்பு நடைபெறக்கூடாதென்றும் சட்டங்கள் இருக்கும் நிலையிலும் அச்சட்டங்கள் துளியும் மதிக்கப்படாமல் அனுமதியில்லாமல் கல்லுடைப்பு நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அத்துமீறல்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் யார் தண்டிப்பது யாரை தண்டிப்பது. அங்கு கல்லுடைப்பு நடத்திய ஒப்பந்தக்காரர்களையா? இந்திய தொல்லியல் கழகத்துடன் கலந்தாலோசிக்காமல் அவ்வொப்பந்தக்காரர்களுக்கு அங்கு கல்லுடைக்க அனுமதியளித்த நகராட்சி அலுவலர்களையா? இப்படிப்பட்ட ஒரு கொடுமை, இந்தியாவில் நடக்கும் கொடுமை போன்று வேறு எங்காவது நடைபெறுமா? இப்படி பண்டைய நாகரிகத்தை பாதுகாக்க தெரியாத நமக்கு, இந்தியாவின் கலாசாரத்தைப் பற்றியும் பண்டைய உயர்ந்த நாகரிகத்தைப் பற்றியும் பெருமையாக பேசுவதற்கு தகுதி சிறிதளவேனும் இருக்கிறதா? அமெரிக்கா, ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் வரலாறுக்குத் தரும் முக்கியத்துவத்தை பார்த்தால் சிறிது பொறாமையாகக் கூட இருக்கிறது. அங்கு மக்கள் வரலாற்றிற்கு கொடுக்கும் மதிப்பு 'ஆகா இவர்களுக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சமாவது நமது இந்திய மக்களிடம் இருக்கக்கூடாதா' என்று நினைக்கத் தோன்றுகிறது. அமெரிக்காவில் வரலாறு என்று பார்த்தால் ஒரு சில ஆண்டுகள் பழைமையானது தான். நம் இந்தியாவில் உள்ளதைப்போன்று பல்லாயிரம் வருட பழைமையான சின்னங்கள் அங்கு இல்லை. ஆனால் இருக்கும் வரலாற்றுத் தடயங்களையும் அவற்றைப் பற்றிய ஆராய்சிகளுக்கு பணம் செலவிட்டு, அவ்வரலாறைப் பற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லி மிகுந்த அக்கறையுடன் பாதுகாக்கிறது அமெரிக்க அரசு. சில 250- 300 வருட கட்டிடங்களையும் வரலாற்று இடங்கள் - 'Historic properties' என்று அறிவித்து அக்கட்டிடங்களை சிதைக்காமல் இருக்க ஏற்பாடுகள் செய்து அவற்றை கண்காணிக்கவும் செய்கிறது. அத்துமீறல்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றன. எகிப்து நாட்டில் உள்ள பிரமிட் கோபுரங்களைவிட எந்தவிதத்திலும் குறைந்ததில்லை நம் இந்தியாவில் இருக்கும் பண்டைய நாகரிக அடையாளங்கள். ஆனால் அதை நம் இந்திய மக்கள் உணரவில்லையே. அப்படி உணர்ந்தால், வரலாற்றைப் பற்றிய அக்கறை நம் இந்தியர்களுக்கு இருந்தால் நம் இந்தியாவில் பல புராதன அடையாளங்கள் இன்றும் நாம் காணும் வகையில், ஆராயும் வகையில் பாதுகாப்புடன் இருந்திருக்கும், இப்பொழுது இந்த கட்டுரை ஒரு துக்கச்செய்தியைப் பற்றி இல்லாது ஒரு இனிய செய்தியைப் பற்றிய கட்டுரையாக மலர்ந்திருக்கும், நமக்கும் நம் பண்டைய பெருமையைப் பற்றிப் பேச தகுதியும் இருந்திருக்கும். அயல்நாட்டு மோகமும், மேலைநாட்டு நாகரிகமும் விரைவாக பரவிவரும் இந்தியாவில், இனியாவது மக்கள் விழிப்புடன் இருப்பார்களா? வரலாற்று அக்கறை நம் இந்திய மக்களிடையே தோன்றுமா? அரசு வாரலாற்றுத் தடயங்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகள் எடுக்குமா? கேள்விகள் பல. பதில் தான் தெரியவில்லை. அன்புடன் ஆசிரியர் குழுthis is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |