![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 1
![]() இதழ் 1 [ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பல வருடங்களாகச் சரித்திரக் கடலில் ஆழ்ந்து, வரலாற்று உண்மைகளென்னும் பல விலை மதிக்க முடியா முத்தெடுக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினருடன் வரலாற்று ஆய்வின் முதல் படியில் காலெடுத்து வைக்க விழையும் வரலாறு.com குழுவினராகிய நாங்கள், இந்த வருடம் ஜூன் - 12,13 தேதிகளில் சென்று, கண்டு களித்துத் தெரிந்து கொண்ட பல விஷயங்களை, இணைய வாழ் தமிழ்ப் பெருங்குடியினரிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்த கட்டுரை. முனைவர். கலைக்கோவனின் (தட்ட்ச்சு வசதிக்காக இக்கட்டுரை முழுவதும் இவரை டாக்டர் என்று குறித்திருக்கிறோம்) கிளினிக்கில் பல்லவர்களைப் பற்றிய உரையாடலிலேயே ஜூன் - 12-ம் நாள் முழுதும் கரைந்தது. மகேந்திரரின் மகோன்னதத்தைப் பற்றி டாக்டர் விவரித்த பொழுது எங்களுக்கு எழுந்த பிரமிப்பையும், 'அட! எங்க ஆளு ஒருத்தன் என்ன எல்லாம் பண்ணி இருக்கான்' என்ற பெருமிததையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குறிப்பாக, மண்டகப்பட்டில் ஒரு கல்வெட்டில், "இதற்கு முன் கோயில் கட்ட உபயோகித்த மரமில்லாமல், சுதையில்லாமல், செங்கல் இல்லாமல், உலோகமில்லாமல் மும்மூர்த்திகளுக்கு ஒரு கோயில் எழுப்பியிருக்கிறேன்", என்று கூறியிருப்பதை டாக்டர் எங்களுக்குக் கூறியபொழுது என் கண்முன் தனி உலகம் விரிய ஆரம்பித்தது. அந்த உலகத்தில், வரலாற்றுக் கண்டுபிடிப்புகளுள் முதன்மையான சக்கரத்தை கண்டுபிடித்த முகம் தெரியாத மனிதனும், மனிதனுக்குச் சிறகளித்த ரைட் சகோதரர்களும், ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களில் ஓடிய ரோஜர் பேனிஸ்டரும், எத்தனையோ விஷயங்களை முதல் முதலில் உலகுக்குக் கொடுத்த நியூட்டனும், ஐன்ஸ்டீனும், எடிசனும், பல PhD thesis-க்களை சில கந்தல் காகிதங்களுக்குள் நிரப்பி முப்பத்திரண்டு வயதுக்குள் முத்திரை பதித்துச் சென்ற இராமனுஜனும், இன்னும் எத்தனை எத்தனையோ பல்துறைப் பேரறிஞர்களும் அமர்ந்திருக்க, அவர்களுக்கிடையில் கம்பீரமான இரண்டு சிம்மாசங்களில் மகேந்திரனும் ராஜராஜனும் அமர்ந்திருந்தனர். மண்டகப்பட்டு கல்வெட்டைப் பற்றிப் பேசுகையில் கிடைத்த சில தகவல்கள்: உலோகமில்லாமல் கட்டியதாக மகேந்திரன் கூறியிருப்பதால், அதற்கு முன் உலோகத்தில் கோயில் கட்டியிருக்கிறார்கள் என்று தெளிவாகிறது. செங்கல்லும், சுதையும், மரமும் பல நூற்றாண்டுகளுக்கு நிற்காது என்றாலும், உலோகக் கோயில்கள் நின்றிருக்க வேண்டுமே என்ற கேள்வி எழ, "அப்படியொரு கோயிலும் இன்று இருப்பதாகத் தகவல் இல்லை" என்றார் டாக்டர். அந்தப் பதிலால் நிறைவடையாததால், "உலோகக் கோயில்கள் திருடு போயிருக்கலாம்" என்றும் கூறினார். அந்த கருத்தை வலியுறுத்தும் வண்ணம், " இன்று சிதம்பரத்தில் இருக்கும் கூரை கூடப் பொன் இல்லையே" என்றதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பராந்தகன் வேய்ந்த பொன் கூரை இன்று நாம் காணும் கூரை இல்லை என்று நம்பவே முடியவில்லை. ஸ்ர்ரங்கம் கோயிலிலும் இருப்பது சுந்தர பாண்டியன் வேய்ந்த கூரையல்ல என்று இன்னொரு அதிர்ச்சியயும் தந்தார். இப்பொழுது இருப்பது, தீ விபத்துக்குப் பின் பழுது பார்க்கப் பட்ட கோபுரம்தான்" என்றார். தீ விபத்துக்கு முன் சுந்தர பாண்டியன் வேய்ந்த கூரை இருந்ததா என்று நான் கேட்கவில்லை. இல்லை என்றுதான் பதில் வரும் என்று எனக்குத் தோன்றியது. இப்படியாகப் பல பேரரசர்களின் தலையை உருட்டியபடி சனிக்கிழமையைக் கழித்த நாங்கள், அடுத்த நாள், தமிழகத்தின் அந்த பகுதியிலிருக்கும் ஒரே பல்லவர் காலக் கோயிலான, திருச்சிராப்பள்ளி- சென்னை நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சில கி.மீ தூரத்திலிலுள்ள திருப்பட்டூருக்குச் செல்வதாக முடிவெடுத்தோம். ஜூன் 13-ம் தேதி எங்களது குழுவின் ஆஸ்தான ஹோட்டல் ஆகிவிட்ட 'விஜய் லாட்ஜிலிருந்து' நமது ஆஸ்தான டிரைவர் முருகனின் அம்பாசதர் வண்டி திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் ஊட்டத்தூரை நோக்கிப் பறந்தது. 'தொகு மாமணி ஈஸ்வரர்' அருள் பாலிக்கும் இந்த ஸ்தலத்தில் சில அழகிய 'later chola bronzes'-ஐக் கண்டோம். (ஒரு சிலையைப் பார்த்ததும் அது எந்த காலத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிப்பதைப் பற்றி ஒரு தனிக் கட்டுரை சீக்கிரமே உங்களை வந்து சேரும்). குறிப்பாக ஒரு உமாவின் திருவுருவும், ஒரு சோமாஸ்கந்தரின் திருவுருவமும் மனதைக் கவர்ந்தன. இரண்டுமே 'later chola'-வாக இருக்கக்கூடும் என்றாலும், சோமாஸ்கந்தர் சிலையில் இருக்கும் உமாவின் வடிவத்தில் இருக்கும் 'ease' இன்னொன்றில் சற்றுக் கம்மியாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது. டாக்டர் கலைக்கோவன், சிலைகளைக் குறிப்பிடும் பொழுது 'stiffness' என்ற வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அந்த சோமாஸ்கந்தர் சிலையில் இருக்கும் சிவனின் posture-க்கும் உமாவின் posture-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் இந்த stiffness என்பது என்ன என்று நன்றாக விளங்கும். இருவரும், ஒரு காலை மடித்தும் ஒரு காலைத் தொங்கவிட்ட படியும் அமர்ந்த நிலையில் இருக்கிறார்கள. (இதற்கு 'சுகாசனம்' என்று பெயர்) சிவனின் மடங்கிய காலைப் பார்த்தால், படத்தின் 'plane'-க்கு parallel-க இருக்கிறது. இப்படி அதிக நேரம் உட்கார்ந்தால் கால் வலிக்க ஆரம்பித்துவிடும். உண்மையில் இது சுகாசனமாகாது. உமையவளின் உட்கார்ந்த நிலையைப் பார்த்தால் எந்த 'conciousness'-உம் இல்லாது 'casual'-க அமர்ந்துள்ளது தெரிகிறது. இந்த அழகிய வெண்கலச் சிற்பங்களைப் பார்த்தபின் 'தொகுமாமணி ஈஸ்வரரை' தரிசித்தோம். கற்பூர ஆரத்தி காண்பித்த பொழுது, அந்த தீபத்தின் ஜ்வாலையின் பிரதிபலிப்பு அந்த லிங்கத்தினுள் உறையும் ஜோதிப் பிழம்பினைக் காட்டுவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. சிவனை நோக்கி இருந்த நந்திகேஸ்வரரைத் தவிர, கிழக்கை நோக்கி இன்னொரு நந்திகேஸ்வரர் வீற்றிருந்தார். 'நர்மதை', 'காவேரி', 'கோதாவரி' போன்ற நதிப்பெண்களுள் யார் பெரியவர் என்ற சர்ச்சை எழும்ப, சிவன்,அந்நத்¢களை இந்த நந்தியின் மேல் பாய்ந்து அவரைக் கடக்குமாறு கூறினாராம். எந்த நதியும் அவர் உடலின் நீளத்தையும் அகலத்தையும் கடக்க முடியாமல் போக, "கங்கைதான் பெரிய நதி" என்று மற்ற நதிகளுக்குக் கர்வ பங்கம் செய்தாராம். அந்தக் கோயில் குருக்கள் சொன்ன சுவாரஸ்யமான ஸ்தல புராணக் கட்டுக்கதை இது:-) ![]() கோயிலை நன்கு தரிசித்தபின் அவ்வூர்காரர் ஒருவரின் தயவால் கிடைத்த தேனீரையும், வடையையும் ஒரு பிடி பிடித்துவிட்டு, திருப்பட்டூரை நோக்கிக் கிளம்பினோம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |