![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 173
![]() இதழ் 173 [ நவம்பர் 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 52: வாள்போல் வைகறை மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 明けぬれば 暮るるものとは 知りながら なほうらめしき 朝ぼらけかな கனா எழுத்துருக்களில் あけぬれば くるるものとは しりながら なほうらめしき あさぼらけかな ஆசிரியர் குறிப்பு: பெயர்: அமைச்சர் மிச்சினோபு காலம்: கி.பி. 972-994. 22 வயதிலேயே அகால மரணமடைந்த இவர் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமின்றிக் காலத்தால் அழியாத 36 கவிஞர்களின் பிற்காலப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார். பேரரசர் என்யூவின் அரசவையில் படைத்தலைவராக விளங்கிய தமேமிட்சுவின் மகனாகப் பிறந்தாலும் இவரது மாமா கனெய்யே தத்தெடுத்துக்கொண்டார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 49 பாடல்களும் தனிப்பாடல் திரட்டு ஒன்றும் உள்ளன. பாடுபொருள்: காதலர்களைப் பிரிக்கும் விடியல் பாடலின் பொருள்: இப்போது விடிந்திருக்கிறது. நாம் சந்திக்க மீண்டும் இரவு வருமென்று தெரியும். இருப்பினும் உன்னிடமிருந்து பிரிப்பதால் இவ்விடியல் எனக்கு வேதனையைத் தருகிறது. நம் சங்க இலக்கியத்தின் 157வது குறுந்தொகைப் பாடலை ஒத்திருக்கிறது இப்பாடல். "குக்கூ" என்றது கோழி; அதன் எதிர் துட்கென்றன்று என் தூய நெஞ்சம்- தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே. ஜப்பானில் காதலின் ஒரு பகுதியாகக் காதலியின் மனை நீங்கிய காதலன் அன்றைக்கே கடிதம் அல்லது கவிதை ஒன்றை அனுப்புவார் என்று பார்த்தோமல்லவா? நேற்றைய சந்திப்புடன் நம் உறவு முடிந்து விடாது; இன்னும் தொடர விரும்புகிறேன் என்பதற்கு இக்கடிதம் ஒரு அடையாளம். இப்பாடலும் அத்தகைய ஒரு கடிதம்தான். இரவு முழுவதும் கூடி மகிழ்ந்திருந்த காதலர்களை விடியல் பிரித்துவிட்டது. மீண்டும் இரவு வரும் என்று தெரிந்திருந்தாலும் விடியல் ஏன் வந்தது என்ற பொருள் தொனிக்கும் நேரடியான எளிமையான பாடல். வெண்பா: வறியவன் கையறென நீங்கினும் சேர்தல் மறிதரும் என்றே மனமும் - அறியினும் நெஞ்சம் நிறையவே வேதனை கூட்டிடும் நம்மைப் பிரிக்கும் விடிவு கையறு - ஏதும் செய்யவியலாத மறிதரும் - மீண்டும் வரும் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |