![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 114
![]() இதழ் 114 [ டிசம்பர் 2014 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பழம்பெரு காப்பியங்களில் இராமாயணமும் ஒன்று. சங்க காலம் முதல் இன்றுவரை இராமனின் கதை தமிழனின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாய்த் திகழ்கிறது. தமிழர்களின் தொல் பரம்பரைக் கதைகளில் இராமன் கதை தொடர்ந்து பாடப்பெற்று மக்களின் வாழ்வியல் வழக்கில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.
![]() நெய்தல் திணை காட்டும் ஓர் அரிய காட்சி மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் வரிகளில் இதோ.. வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல.. - அகநானூறு 70;13-15 விளக்கம் வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான முதுகோடியில் (தனுஷ்கோடியில்?) முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக (அதாவது மந்திராலோசனை செய்வதற்காக) ஓர் ஆலமரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி பல விழுதுகள் கொண்ட ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல.. தோழியின் கூற்றாக அமையும் இப்பாடலின் வழி பழந்தமிழரின் தொன்மரபுக் கதைகளுள் இராமன் கதையும் ஒன்று என்பது தேற்றம். அயோத்தி இராமன் பற்றிய குறிப்பு வைகைக் காவலன் பாண்டியனின் துறைமுகத்துடன் இணைந்து வரும் செய்தியை நெடுந்தொகை வழி இவ்வாறு அறிகிறோம். பண்டு தொடங்கி இன்று வரை வடக்கிலிருந்து தெற்கு வரை இராமாயணக் காற்று பரத கண்டம் முழுவதிலும் வீசிக்கொண்டே இருக்கிறது.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |