![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 77
![]() இதழ் 77 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சீர்மிகு தமிழகத்தில் பல மன்னர் ஆட்சிக்காலம் தோறும் பற்பல செப்பேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. அச்செப்பேடுகள் வாயிலாக நமக்குப் பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக அன்றைய தமிழ்ச் சமூகத்தில் வழக்கில் இருந்த வரியினங்கள். இவை ஒரே தொடராகப் பல செப்பேடுகளில் இடம்பெறுகின்றன. இவ்வரிகளைப் பற்றியும் அவற்றின் விளக்கங்களையும் இனிக் காண்போம். சமூகத்தில் பற்பல தொழில் புரிவோர் தம் கடமையாக அரசுக்குச் செலுத்திய வரிகள் வருமாறு :- இடைப்பாட்டம் :- ஆடுகள் மேய்க்கும் இடையர் செலுத்தும் வரி. தறி இறை :- துணி நெசவாளர்கள் செலுத்தும் வரி. குசக்காணம் :- குயவர் செலுத்தும் வரி. தட்டார் பாட்டம் :- பொற்கொல்லர் செலுத்தும் வரி. ஈழப்பூட்சி :- ஈழவர்கள் கள் இறக்குவதற்குச் செலுத்தும் வரி. வண்ணாரப்பாறை :- துணி துவைத்துத் தரும் வண்ணார் செலுத்தும் வரி. நல்லா :- பசுவின் வளர்ப்புக்கான வரி. நல்லெருது :- எருது வளர்ப்புக்கான வரி. ஓடக்கூலி :- படகிற்காகச் செலுத்தும் வரி. இவற்றையல்லாமல் மற்ற ஏனைய வரிகள் வருமாறு. நாடாட்சி :- நாட்டின் நிர்வாகத்திற்கான வரி. ஊராட்சி :- ஊர்க் காரியங்களின் நிர்வாகத்திற்கான வரி. புதாநாழி :- ஒவ்வொரு வீட்டுக்கான வரி. நாடுகாவல் :- நாடு என்னும் பிரிவின் காவலுக்காக இறுக்கும் வரி. உல்கு :- சுங்கவரி. நீர்க்கூலி :- தண்ணீர் வரி. வாலமஞ்சாடி :- மனை வரி. விற்பிடி :- கிரய சாசனம் வரி. பழவிறை :- பழைய வரி. மன்றுபாடு :- நியாய விசாரணை சபைக்கு இறுக்கும் வரி. இலைக்கூலம் :- தான்யங்களுக்குரிய வரி. கண்ணாலக் காணம் :- திருமணத்திற்காக விதிக்கப்பட்ட வரி. பல சமயங்களில் இவ்வரிகளை மக்கள் நேரடியாக அரசிற்குச் செலுத்த வேண்டியது இல்லை. மாறாக அவ்வூர் சார்ந்த திருக்கோயிலுக்கு நூறு எண்ணிக்கையில் அல்லது ஆயிரம் எண்ணிக்கையில் அல்லது விதிக்கப்பட்ட அளவு எண்ணிக்கைகளில் கலம் நெல்லாகச் செலுத்தவேண்டும். சில சமயங்களில் காசாகவும் செலுத்தவேண்டும். இவ்வரிகள் ஆண்டுதோறும் செலுத்தப்படவேண்டும். இது "காணிக்கடமை" எனக் குடிமக்களிடையே அழைக்கப்பட்டது. இவற்றையல்லாமல் வேறு சில வரியினங்களும் விதிக்கப்பட்டன. இவ்வரிகளைச் செயல்படுத்த ஊர்தோறும் பல நிலைகளில் அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்தம் பணிகளை வேறொரு கட்டுரையில் பின்னாளில் காணலாம். மேற்கண்ட பல வரியினங்கள் பல்லவர்களின் செப்பேடுகளிலும் அவர்களைத் தொடர்ந்து தமிழ்மண்ணை ஆட்சி புரிந்த சோழர்களின் செப்பேடுகளிலும் காணலாம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |