![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 68
![]() இதழ் 68 [ பிப்ரவரி 27 - எஸ். ராஜம் சிறப்பிதழ் ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அமெரிக்காவைப் போல் வருமா? ஜப்பானைப் போல் வருமா? என்று தாய்நாட்டைக் குறை சொல்வதுதான் இந்தக் கணிணித்துறை மற்றும் என்.ஆர்.ஐ மக்களின் வேலை என்று குறைபட்டுக் கொள்ளாதீர்கள். இப்பொழுது நான் கூறவருவதும், அமெரிக்காவில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நம் நாட்டில் நடைபெறுவதில்லையே என்ற ஆதங்கத்தினால்தான். தேசிய வரலாற்று தினம் என்ற ஒன்று ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர் தினம் போன்று அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்காததால், இது பொதுமக்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே தவிர, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடுகிறது இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆணையம். இந்த ஆண்டு அடுத்த மாதம் மார்ச் 24ம் தேதி மேரிலாண்ட் மாகாணத்திலுள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் கொண்டாடுகிறது. National History Day என்ற இணையதளத்தில் இதன் நோக்கம் மற்றும் நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு இவ்விழாவில் பங்குபெற்ற ஒரு பெண்மணி கீழ்க்கண்டவாறு கூறுகிறார். "I wish I had been able to participate in National History Day when I was in school. What a great way to get kids excited about history, research and the mechanics of composing a story. Students today are so sophisticated about their work. I might just have to snag a few of these young documentary experts for my next production!" இவ்விழாவில் எதனால் கலந்துகொள்ளவேண்டும் என்று முதன்மையான பத்துக் காரணங்களையும் அடுக்குகிறது இந்த இணையதளம். 1. Teaches History 2. Engages Students 3. Energizes the Curriculum 4. Promotes High Academic Standards 5. Encourages Literacy 6. Enhances Assessment 7. Teaches Critical Thinking 8. Inspires Curiosity 9. Recognizes the Student Strengths 10. Activates Civic Engagement இந்தப் பத்துக் கருத்துக்களையுமே நம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர்களும் பெற்றோர்களும் எண்ணிப் பார்க்கவேண்டும். வரலாறு என்பது செத்துப் போனவர்களின் கதை என்ற எண்ணத்தை மாற்ற உதவும். இவ்விழாவில் நடைபெறும் போட்டியில் பங்குபெறுவதைப் பற்றி இவ்விணையதளம் என்ன சொல்கிறது என்பதைக் கீழே தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறேன். தேசிய வரலாற்று தினம் என்றால் என்னவென்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு ஆண்டும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட உங்களைப்போன்ற மாணவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு. அந்தந்த ஆண்டுக்கான விழாவின் மையக்கருவை ஒட்டி வரலாறு தொடர்பான தலைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைப் பற்றி நூலகம், ஆவணங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்று நேர்காணல்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிடுதல் மூலமாக ஆய்வு செய்வீர்கள். இவ்வாய்வின்போது தாங்கள் சேகரித்த தரவுகளை ஆராய்ந்து உள்வாங்கிக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகு, கீழ்க்கண்ட ஐந்து வழிகளில் தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தலாம். 1. As a paper 2. An exhibit 3. A performance 4. A documentary 5. A web site ஏப்ரல் மாதத்தில் தங்களது ஆய்வுகளைத் தங்களது வட்டார வரலாற்று தின விழாவில் சமர்ப்பிக்கலாம். அங்கு அவை பேராசிரியர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்களால் மதிப்பிடப்படும். அதில் தங்களது ஆய்வு சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தங்கள் மாகாணத்தின் வரலாற்று தின விழாவில் சமர்ப்பிக்கப்படும். மாநில அளவில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் தேசிய வரலாற்று தின விழாவில் பங்கேற்கத் தகுதி வாய்ந்தவையாகக் கருதப்படும். இங்குதான் அமெரிக்கா முழுவதிலுமிருந்து சிறந்த வரலாற்றாய்வுகள் ஒன்றுகூடிப் போட்டியிடும். வரலாற்று தின ஆய்வுப் பயணத்தைத் தொடங்குவதற்கு வாழ்த்துக்கள். இது கண்டிப்பாகத் தங்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும். தங்கள் ஆய்வின்போது என்ன விதமான தகவல் கிடைக்கும், யார் யாரையெல்லாம் சந்திக்கப் போகிறீர்கள் என்பது தங்களுக்கே தெரியாது. ஆனால் இதன் மூலம் பெறும் அனுபவ அறிவு வாழ்நாள் முழுக்கத் தங்களுக்குத் துணைநிற்கும். அடேங்கப்பா! வரலாறு படிக்கும் நம்நாட்டு மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்த இதுபோன்ற ஓர் அமைப்பு இல்லையே என்ற கவலைதான் வரலாற்று ஆர்வலர்களை வாட்டுகிறது. இவ்வமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள். நம்நாட்டில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்குக் கூடும் கூட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாததாக இருக்கிறது. இவ்வமைப்புக்குப் பெரும் பங்களிப்பைச் செய்த திரு. கென்னெத் இ. பெரிங் என்பவரது சிறு உரையும் இதில் இருக்கிறது. இன்றைய மாணவ சமுதாயத்துக்கு வரலாறு பற்றிய விழிப்புணர்வு ஏன் அவசியம் என்பதைத் தெள்ளத் தெளிவாக உரைத்திருக்கிறார். 2010ம் ஆண்டுக்கான மையக்கருவாக Innovations in History என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை வாசிக்கும் அமெரிக்காவிலுள்ள பெற்றோர்கள் தங்களது பள்ளி செல்லும் குழந்தைகளை இதில் ஆர்வமுடன் ஈடுபடச் செய்யவேண்டும் என்று வரலாறு.காம் வேண்டுகோள் விடுக்கிறது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |