![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 29
![]() இதழ் 29 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2006 ] ஓவியர் சில்பி சிறப்பிதழ் ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அன்பார்ந்த வாசகர்களே,
தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் தொல்லியல் துறையாலும், இந்து சமய அறநிலையத்துறையாலும் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. வருமானம் உள்ளவை/இல்லாதவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை/பிந்தியவை என்று பல்வேறு சிறப்புகளின் அடிப்படையில் பராமரித்துப் பேணப்படுகின்றன. இதில் பல்லவர்/சோழர்/பாண்டியர் காலக் கோயில்கள் பெரும்பாலானவற்றை வருமானம் இல்லாதவை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகள் என்று எளிதாக வகைப்படுத்தி விடலாம். ஆனால், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சில கோயில்களே இந்த வகையில் அடங்காமல் விடுபட்டுப் போயுள்ளன. அதிலும் ஒரு முக்கியமான குடைவரை விடுபட்டுப் போயுள்ளது வரலாற்று ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். பாண்டியர் காலக் குடைவரையான மலையடிக்குறிச்சி தொல்லியல் துறையாலும் அறநிலையத்துறையாலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. மத்திய/மாநில அரசுகளின் வசமிருக்கும் கோயில்களே சரியான பராமரிப்பின்றி இருக்கும்போது, கைவிடப்பட்ட கோயிலின் நிலை எப்படி இருக்கும்? செல்லும் வழி சரியாக இல்லாவிடில், மக்கள் எப்படி அதன் அழகை அனுபவிப்பார்கள்? ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் வேண்டுமானால் கல்லையும் முள்ளையும் பொருட்படுத்தாது தடைகளைத் தாண்டிச் சென்று ஆய்வை மேற்கொள்ளலாமேயொழிய, ஏற்கனவே 'பழங்கோயில்களில் என்ன இருக்கிறது?' என்று அலட்சியப் படுத்துபவர்களுக்கு அவற்றிலுள்ள அழகுணர்ச்சியை எப்படிப் புலப்படுத்துவது? சென்று பார்க்க விரும்புபவர்களின் ஆர்வத்தையும் முட்புதர் நிறைந்த பாதைகள் குலைக்கலாமா? அதனால்தான், அருகிலுள்ள கோயிலின் குருக்கள் திரு. சுப்பிரமணிய அய்யர் அவர்கள் சென்ற வாரம் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களுக்குக் கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார். அனுப்புநர் ஜி.சுப்பிரமணிய அய்யர், அர்ச்சக பரம்பரை நிர்வாகி, அ/மி மகாதேவர் திருக்கோயில், பாறைக் குடைவரைக் கோயில், மலையடிக்குறிச்சி அஞ்சல், முள்ளிக்குளம் வழி, திருநெல்வேலி மாவட்டம், அ.கு.எண் : 627 755. மதிப்பிற்குரிய அய்யா, பொருள் : மலையடிவாரம் - கோவில் பாதை மிக மோசமான நிலை - புனருத்தாரணப் பணிக்கு உதவி கேட்டல் தொடர்பாக. மேற்கண்ட திருக்கோவில் மலையடிவாரத்தில் பாறையில் குடைவரைக்கோயிலாக உள்ளது தாங்கள் அறிந்ததே. சரிவான மண்மேட்டில் ஏறிக் கோவிலுக்குச் செல்லும் பாதை மிகவும் கரடுமுரடாகவும் வெள்ள அரிப்பினால் மலை ஏகப்பட்ட கிடங்கு மேடாகவும் இருப்பதால் தொல்லியல்துறை மொமூலமாக ஏதேனும் புனருத்தாரணப் பணிக்கு உதவிதொகை வழங்க பரிந்துரைத்து உதவிட வேணுமாய்ப் பணிவன்புடன் கோருகிறேன். தங்கள் உண்மையுள்ள ஜி.சுப்பிரமணியன் திரு. சுந்தர் பரத்வாஜ் போன்று தமிழ்நாட்டின் பழங்கோயில்களில் ஆர்வம் கொண்ட தமிழர்கள் பலர் தேவையான பொழுது கோவில் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்குப் பொருளுதவி செய்து வருகிறார்கள். Temple Cleaners குழுவின் உறுப்பினர்களைப் போன்றவர்கள் உடலுழைப்பையும் ஈந்து வருகின்றனர். இன்னும் சிலர், பொருளுதவியும் உடலுழைப்பும் நல்க விருப்பமிருந்தும், எப்படிச் செய்வது என்ற வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்த மொமூன்று தரப்பினரின் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்நோக்கித்தான் நேற்றைய சுவடுகள் இன்னும் காத்திருக்கின்றன. மேலே குறிப்பிட்டுள்ள திரு.சுப்பிரமணிய அய்யரை அவரது முகவரியில் தொடர்பு கொண்டு, பல்லவர்களுக்கு ஈடாகப் பாண்டியர்கள் வடித்த குடைவரையைப் புத்தெழில் பெறச் செய்யுமாறு வாசகர்களை வேண்டிக்கொள்கிறோம். நன்றி. ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |