![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 126
![]() இதழ் 126 [ ஜனவரி 2016 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
சங்க கால வீரயுக சமுதாயத்தின் எச்சங்களாக நினைவுச் சின்னங்களாக இருப்பது கற்பதுக்கைகளே. இன்றளவும் தமிழகமெங்கும் குறிஞ்சி நிலப் பகுதிகளிலும், பாலை நிலங்களிலும் இவ்வகை இறந்தோர் நினைவிடங்கக் காண்கிறோம்.
சவக்குழிகளின் மேலும், அவற்றைச் சூழ்ந்தும் ஒரு பெரிய கல் நிறுத்தப்பட்டு அதைச்சுற்றிப் பல்வேறு வடிவங்களில் சிறியதும், பெரியதுமாகக் கற்கள் அடுக்கப்பட்டிருக்கும். இத்தகைய சவக்குழியைப் பதுக்கை அல்லது கல்பதுக்கை என்பர். பாலை நிலத்துப் பதிவுகளாக அமையப் பெற்றிருக்கும் அகத்திணையின் பாடல்வரிகள் இதோ. 'பதுக்கைத்து ஆயசெதுக்கை நீழல்' - 151-11 'வில்லிட வீழ்ந்தோர் பதுக்கை' - 154-5 'ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவிரு பதுக்கை' - 215-11 'படுகளத்து உயிர்த்து மயிர்த்தலை பதுக்கை' - 231-6 வெட்சி, கரந்தைப் போர்கள், தொறுபூசல்கள் எனப் பல வீரநிகழ்வுகளின்போது மரணமெய்திய வீரமறவர்களுக்கு இப்பதுக்கைகள் அமைக்கப்பட்டன என்பது மேற்கண்ட அகப்படாடல்கள் கூறும் வரலாற்றுச் செய்தியாகும். இறந்தோர் வழிபாடு என்னும் தொல்தமிழ் பண்பின் சீரிய எடுத்துக்காட்டே தொல் பதுக்கைகள் அமைப்பாகும். மரபுவழியாகப் பல இனக்குழுக்களும் இத்தகைய வழிபாட்டு வழக்கியல்தனை வாழ்வியலாகக் கடைப்பிடித்து வருதலை இன்றும் காண்கிறோம். நனி சிறந்த நாகரிகத்தின், வீரத் தமிழனின் அடையாள முகவரியே இப்பதுக்கைகள் ஆகும். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |