![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 107
![]() இதழ் 107 [ மே 2014] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
(சென்ற இதழ்த் தொடர்ச்சி...) கி.பி. 1748 செப்டம்பர் முதல் வாரம் ஆங்கிலேயர்கள் புதுச்சேரியை முற்றுகையிட்டிருந்த சமயத்தில், பிரெஞ்சுக்காரர்கள் கொசப்பாளையம், பறச்சேரி போன்ற கிராமங்களுக்குத் தீயிட்டு விட்டுப் பட்டணத்து மதிலுக்குள் வந்துவிட்டனர் என்று விவரிக்கும் பிள்ளை 7ம் தேதி என்ன நடந்தது என்று சொல்கிறார். அங்கே குந்தாணி பீரங்கி ஏற்றி வைப்பதற்காகத் துரை, பரதி முதலான பேர் அக்கோயிலுக்குப் போனபோது, அவர்களது பேச்சையும் "மதாமின்" பேச்சையும் அங்கேயே பேசி கோன்சேல் கூடி சம்பாவுனு கோயில் பாதிரிகளுக்கு ஈஸ்வரன் கோயிலை இடித்துப் போடுகிறோமென்று வார்த்தைப்பாடு கொடுத்துப் போட்டு புறப்பட்டு துரைவீட்டுக்கு வந்தார் . . . . நான் அறியேன்". அன்றைய திருக்கோயில்கள் வரலாற்றின் அவலநிலைகள் இஃது. கையூட்டு அரசியல் அமைப்பில் என்றுமே கையூட்டுப் பெறுதல் என்பது தவிர்க்க முடியாதது என்பதற்கு அன்றைய புதுச்சேரி அரசியல் களமே சிறந்ததொரு சான்றாகும். பணம் முதற்கொண்டு ஆடுகள், மாடுகள், குதிரைகள் வரை கையூட்டாகப் பெறப்பட்டன. சந்தாசாகிப், நாசர்ஜங் முதலியவர்களிடமிருந்து நட்புமுறையில் வெகுமதி (அன்பளிப்பு) பெறுதல் "ஒப்பந்த" அடிப்படையில் பெறப்பட்டது. துய்ப்ளேயின் மனைவியே பலரிடம் இலஞ்சம் பெற்றார் என எழுதுகிறார் ஆனந்தரங்கம்பிள்ளை. அவ்வாறு கேட்ட தொகையைக் கொடுக்காதவர்களைக் கண்டபடி திட்டியுள்ளார். மேடம் துய்ப்ளே பல பதவிகளை அளிக்கவும் இலஞ்சம் பெற்றுள்ளார். அரசாங்கமும் கையூட்டும் இணைபிரியாத பிறவிகளாய்க் கைகோர்த்துச் செயல்பட்டன அன்றைய சமுதாயத்தில் என்பது இத்தினசரியின் வழியே தேற்றம். காமன் விழா அன்றைய புதுச்சேரியில் மக்களால் பெரிதும் விரும்பிக் கொண்டாடப்பட்ட விழா "காமன் விழா"வாகும். கடற்கரையில் ஆணும் பெண்ணும் இணைந்து மார்ச் மாதத்தில் இதைப் பெரும் விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேற்கண்ட பகுதிகளைப் போல பற்பல சுவாரசியங்களின் தொகுப்பாய் இந்நாட்குறிப்பு விளங்குகிறது. திருக்கோயில்களின் அழிவு, அவற்றின் காரணிகள், நாம் போற்றும் மேனாட்டாரின் கருத்து அவலங்கள், மேடம் துய்ப்ளேயின் இராஜதந்திரங்கள், அவரின் கையூட்டு வாங்கும் சாதுரியம், படுக்கையறையில் இறுதியாக நிர்ணயிக்கப்படும் அரசியல் / அரசாங்க முடிவுகள், பிரெஞ்சு கர்நாடகப் போர்கள் என இப்படிப் பல சுவாரசிய வரலாற்றுச் சித்திரங்களின் தொகுப்பு திரு. ஆனந்தரங்கம்பிள்ளை என்னும் தமிழனால் எழுதப்பட்ட "தினசரி" குறிப்புகள். தமிழன் என்று பெருமிதப்படும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. வாழ்க தமிழ்ச் சமுதாயம்! ஈடு இணையில்லாத சமுதாயம்! உலகத்துக்கொரு புதுமை! சில எண்ணத்தூறல்கள் 1. தொலைநோக்குப் பார்வைகள் தூண்டும் எழுத்துத் தாகத்திற்கும், வரலாற்று ஆர்வத்திற்கும், கலை எழுச்சிக்கும் என்ன விளக்கங்கள் கொடுக்க இயலும்? Great minds. Great thoughts. You can't rula a thinking person and you can't control his thoughts. ஆனந்தரங்கம்பிள்ளை ஓர் உதாரணம். 2. இந்நாட்குறிப்புகளைத் தழுவி எழுதப்பட்டதுதான் திரு. பிரபஞ்சனின் நாவலான "வானம் வசப்படும்". கற்பனை அதிகம் மிகாமல் எழுதப்பட்ட சிறந்த நாவல். சாகித்ய அகாடமியின் விருது பெற்றது. 3. விஷயசுகம் தரும் இனியநடை. வாசிக்க வாசிக்க நூலின் பிரம்மாண்டம் நம்மை வசீகரிக்கின்றது. இந்நூல்களின் முழுத்தொகுப்பை (12 வால்யூம்கள்) வாசிக்கும் நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |