![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 74
![]() இதழ் 74 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
"கரிய மாமை நிறமுடைய காதலிப்பெண்ணே! பொறித் தொழில் புனைந்த பதுமைபோல அசைந்து அசைந்து உன் தந்தையின் இல்லத்தை விட்டு அந்த மனையெல்லையைக் கடந்து நான் கூறுகின்ற சொற்களைக் கேட்டு என்னோடு வந்தாய் என்றால் முதல் பெயலைப் பொழியத் தொடங்கிய குளிர்ச்சியான எழிலி பொழிந்த அழகுமிக்க கானகத்தில், அகன்ற மேலிடமெல்லாம் பரவிய விரைந்த செலவினையுடைய சிவந்த இந்திர கோபப் பூச்சிகளைக் கண்டும் அவற்றைப் பிடித்தும் சிறிது பொழுது நீ இக்காட்டில் விளையாடு. நானோ, இளைய களிற்றியானை உரிஞ்சிய பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின் மணற்பரப்பினையுடைய அதன் பெரிய பின்புறத்தில் மறைந்திருந்து ஆறலைக் கள்வர் போன்றோர் சூழ்ந்து போர் செய்ய வந்தால் அஞ்சாது போர்புரிந்து அவர்கள் ஓடுமாறு செய்வேன். அதுபோல் உன்னுடைய சுற்றத்தார் பின்தொடர்ந்து வந்தால் அவர்கள் கண்ணில் படாது மறைந்து கொள்வேன்" என்று தலைவி மனம் மகிழுமாறு பாலைத் தலைவன் உரைக்கின்றான். இதோ நற்றிணைப் பாடல். நற்றிணை : 362 ஆசிரியர் : மதுரை மருதன் இளநாகனார் "வினயமை பாவையின் இயலி நுந்தை மனைவரை இறந்து வந்தனை யாயின் தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் நீவிளை யாடுக சிறிதே யானே மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே." இப்பாடலின் முதல் வரியில் இடம்பெறும் "வினையமை பாவை" என்பதை ஆராயும்போது பொறிதொழில் புனைந்த பதுமைகள் சங்ககாலத்தில் வழக்கில் இருந்துள்ளன. அவை அசைந்து அசைந்து இயங்கும் இயல்புடையன என்பது பாடல் வரியின்மூலம் விளங்கும். இயந்திரமமைந்த பாவைகள் தமிழர் (Mechanical Engineering) பொறியியல் தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றாகும். இக்காலத்திய Mechanical dollsக்கு அவற்றை ஒப்பிடலாம். இதுபோன்று தமிழரின் பொறிதொழில் நுட்பச் சான்றுகள் சங்கப் பாடல்கள் பலவற்றில் காணலாம். ஆய்வுதோறும் தமிழ் இனிதாம்! தமிழன் நாகரிகம் பீடுடையதாம்!! this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |