![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 7
![]() இதழ் 7 [ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
இராஜராஜீஸ்வரம் விமானத்திற்கு வடக்கில் சண்டேசுவரர் திருமுன் அமைந்துள்ளது. தெற்கு நோக்கியிருக்கும் இச்சன்னதியின் கைப்பிடிச்சுவரிலும், அச்சுவரைத் தாங்கும் பீடத்திலும் பலவித இசைக்கருவிகள் கொண்டு இசைக்கும் ஆடவர்களும், அவ்விசைக்கேற்ப ஆடும் பெண்களும் அழகான சிற்பங்களாய் வடிக்கப்பெற்றிருக்கிறார்கள். கைப்பிடிச்சுவர் சிற்பங்கள் மகரவடிவில் அமைந்திருக்கும் கைப்பிடிச்சுவரை ஐந்து பத்திகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இடமிருந்து வலமாக வரும் பொழுது, முதல் பத்தியில் இரண்டு சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. கைப்பிடிச்சுவரைத் தாங்கும் தளத்துக்கு அருகே இருக்கும் முதல் சிற்பத் தொகுதியில் மூன்று பூதகணங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. மற்ற பத்திகளில் காட்டப்பட்டிருக்கும் கலைஞளை உருவத்தில் குள்ளமாக விளங்கும் இக்கணங்களில் முதல் கணம் கஞ்சக் கருவி வகையைச் சேர்ந்த இலைத்தாளத்தை இசைத்தபடியும், இரண்டாவது கணம் தோல்கருவியான மத்தளத்தை முழக்கியபடியும் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களாய் அடி வாங்கிக் கொண்டிருப்பதாலோ என்னவோ, மத்தளம் மிகுந்த சிதைவுக்குள்ளாகியிருக்கிறது) மூன்றாவது கணம் சங்கில் இசையெழுப்பியபடியும் காட்சியளிக்கின்றன. இம்மூன்று கருவிகளுமே ஆடலுக்கு இசைகூட்டப் பயன்படும் கருவிகளாதலால், இக்கணங்களையும் மற்ற பத்திகளில் ஆடற் பயிலும் மாதர்களுக்கு இசைகூட்டும் கலைஞர்களாகக் கொள்ளலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |